உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் பிரமோற்ஸவம் நிறைவு

திருக்கோஷ்டியூரில் பிரமோற்ஸவம் நிறைவு

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருள பிரம்மோற்ஸவம் நிறைவடைந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.ஆறாம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பெருமாள் அவதார நட்சத்திரத்தில் பத்தாம் திருநாளான மே10 ல் சித்திரைத் தேரோட்டம் நடந்தது. பதினொராம் நாளில் பிரணகலயமும், புஷ்பயாகமும் நடந்தது. 12ம் நாள் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதியில் வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளி பிரமோற்ஸவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை