உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பனிக்கனேந்தலில் கட்டடம் சேதம் நாடக மேடையில் பள்ளி

பனிக்கனேந்தலில் கட்டடம் சேதம் நாடக மேடையில் பள்ளி

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி 50 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. கட்டடங்கள் சேதமடைந்ததை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு மராமத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சேதமடைந்ததால் அருகில் உள்ள நாடக மேடையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பள்ளி செயல்பட்டு வருவதால் வகுப்பறையின்றி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிராமத்தில் திருவிழாக்கள் நடைபெறும் போது நாடக மேடையில் பள்ளி செயல்படுவதால் அங்கு கலை நிகழ்ச்சி நடத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை