மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
08-Jul-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சவுமியநாராயணபுரம் பாண்டி முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பால்குட விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் சிவகங்கை ரோட்டில் நடந்தது. பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. எட்டு மைல் துாரத்திற்கான பெரியமாடு பிரிவில் 13 வண்டிகள் பங்கேற்றன. 6 மைல் துாரத்திற்கான சின்னமாடு பிரிவில் 14 வண்டிகள் பங்கேற்றன.வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும்,சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
08-Jul-2025