மேலும் செய்திகள்
ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
18-Dec-2024
திருப்புவனம்; திருப்புவனம் மணி மந்திர விநாயகர் கோயில் அருகே வளைவில் பஸ்கள் திரும்பும் போது கோயில் அருகே உள்ள இரும்பு மின்கம்பத்தில் அடிக்கடி கனரக வாகனங்கள் சிக்கி விபத்து நேரிட்டு வருகின்றன. எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது விலக கூட இடம் இருப்பதில்லை. நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் அரசு டவுன் பஸ் திரும்பும் போது அங்கிருந்த இரும்பு மின்கம்பத்தில் மோதியது. போக்குவரத்து போலீசார் வந்து பஸ்சை தள்ளி மின்கம்பத்தில் இருந்து விடுவித்தனர்.
18-Dec-2024