உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விதை சுத்தி நிலையம் அமைக்க அழைப்பு விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்

விதை சுத்தி நிலையம் அமைக்க அழைப்பு விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்

சிவகங்கை: சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குனர் மதுரைசாமி கூறியதாவது; மாவட்டத்தில் 80 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. எக்டேருக்கு 50 கிலோ விதை அளவுப்படி 4,000 டன் விதை தேவைப்படும்.வேளாண்மை துறை மூலம் முன்னோடி விவசாயிகள் வயல்களில் விதைப்பண்ணை அமைத்து கொள்முதல் செய்து, 500டன் வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.தனியார் விதை உற்பத்தியாளர் மூலம் 1,500 டன் விதை வினியோகம் செய்யப்படுகிறது. சில விவசாயிகள் அருகில் உள்ள மாவட்டங்களில் தனியார் விதை விற்பனையாளர்களிடம் பெற்று சாகுபடி செய்கின்றனர்.பெரும்பாலும் என்.எல்.ஆர்., பி.பி.டி., ஜே.ஜி.எல்., ஆர்.என்.ஆர்., ஆகிய வெளி மாநிலத்தில் உற்பத்தி செய்த விதைகள் சாகுபடி செய்யப்படுகிறது. காளையார்கோவில், இளையான்குடி வட்டாரங்களில் ஜோதி ரகம் அதிகம் சாகுபடி ஆகிறது. பிற மாநில விதைகள் இங்கு சாகுபடி செய்யும் போது, காலநிலை மாற்றத்தால் மகசூல் பாதிக்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் இந்த விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கினால், விலை குறைவதோடு தரமான விதை, நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக தாராபுரத்தில் 65 விதை சுத்தி நிலையங்கள் உள்ளன.சிவகங்கையில் ஒன்று மட்டுமே உள்ளது. எனவே உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விதை சுத்தி நிலையம் அமைத்து விதை உற்பத்தி செய்து வழங்கினால், நல்ல லாபம் அடையலாம்.மேலும் விபரங்களுக்கு தொண்டி ரோட்டில் உள்ள விதை சான்று அலுவலகம் அல்லது 94439 11431ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை