மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
24-Jan-2025
சிவகங்கை: சிங்கம்புணரியில் நாளை (பிப்.,19) உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்த முகாமில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு காணும் பணிகளை மேற்கொள்வார்கள். பிப்., 19 அன்று மாலை 4:30 முதல் 6:00 மணிவரை சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள செல்வி திருமண மண்டபத்தில் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் மக்கள் பங்கேற்று மனு அளிக்கலாம், என்றார்.
24-Jan-2025