திருவிளக்கு பூஜை
இளையான்குடி: கொங்கம்பட்டி ஓம் சக்தி செல்வ வராகி அம்மன் சக்தி பீடத்தில் நவராத்திரி முளைப்பாரி உற்ஸவ விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வருகிறார். நேற்று முன்தினம் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முளைப்பாரி விழா அக்.2ல் நடைபெற உள்ளது.