உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிலம் வாங்கித்தருவதாக ரூ.25.50 லட்சம் மோசடி    தம்பதி மீது வழக்கு

நிலம் வாங்கித்தருவதாக ரூ.25.50 லட்சம் மோசடி    தம்பதி மீது வழக்கு

சிவகங்கை:காளையார்கோவிலில் 6 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.25.50 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கைமாவட்டம் தேவகோட்டை அருகே திராணியை சேர்ந்தவர் செல்வம் 50. இவரிடம் கல்லல் அருகே செவரக்கோட்டையை சேர்ந்த சேது மகன் முருகேசன், மனைவி சங்கீதா ஆகியோர் 2022 மார்ச் 22 ல், காளையார்கோவிலில் 38 பேரிடம் இருந்து 6 ஏக்கர் நிலத்தை வாங்கித்தருவதாக உறுதி அளித்தனர். இதை நம்பிய செல்வம், கணவன், மனைவியிடம் ரூ.25.50 லட்சம் வரை வழங்கினார். பணத்தை பெற்ற இவர்கள் 3 ஆண்டாக நிலத்தை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டாலும் தராமல் இழுத்தடித்து மோசடி செய்தனர். இதுகுறித்து செல்வம், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை