உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புவனத்தில் கன்றுகளுக்கு அம்மை கால்நடை வளர்ப்போர் தவிப்பு

 திருப்புவனத்தில் கன்றுகளுக்கு அம்மை கால்நடை வளர்ப்போர் தவிப்பு

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். திருப்புவனம் தாலுகா மணல்மேடு பகுதியில் விவசாயிகள் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர். பிறந்து ஒரு மாதமே ஆன கன்று கட்டி ஒன்றுக்கு வாயில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு பால் குடிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இது போன்று இத்தாலுகாவில் பெரும்பாலான கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் பரவி இறந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அம்மை நோயை தடுக்கவோ, சிகிச்சை அளிக்கவோ மருந்து இல்லை என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மாற்றாக நாட்டு மருத்துவத்தை பயன்படுத்தினால், அம்மை நோய் குணமாகி விடும் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை