மேலும் செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
27-Jun-2025
சிவகங்கை: சிவகங்கையில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். அன்பரசன், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திரவியம் துவக்க உரை ஆற்றினார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஐ.சி.டி.எஸ்., சங்க மாநில பொது செயலாளர் வாசுகி, அரசு பொறியியல் கல்லுாரி ஊழியர் சங்க மாநில செயலாளர் முருகன் பங்கேற்றனர். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் சிறப்புரை ஆற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
27-Jun-2025