மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
12-Dec-2024
சிவகங்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தகோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிச்சை, சேவுகமூர்த்தி, அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜராஜேஸ்வரன் ஊர்வலத்தை நிறைவு செய்து வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
12-Dec-2024