உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருவரிடம் செயின் திருட்டு

இருவரிடம் செயின் திருட்டு

சிவகங்கை; காளையார்கோவில் மேலசேத்துாரை சேர்ந்தவர் இருளப்பன் மனைவி சங்கரம்மாள் 69. இவர் ஜூலை 13ல் காளையார்கோவில் அருகே உள்ள கீரனுார் கோயிலுக்கு சென்றார். நெரிசலில் அவர் அணிந்திருந்த 3 தங்க செயினை யாரோ திருடியுள்ளனர். அவரது அருகில் நின்ற காசி மனைவி கருப்பாயி அம்மாள் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினையும் நெரிசலில் யாரோ திருடியுள்ளனர். சங்கரம்மாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ