மானாமதுரையில் இன்று தேரோட்டம்
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் இன்று தேரோட்டமும், நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளிய பிறகு மாலை 4:00 மணிக்கு அலங்காரகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.