உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூச்சி மருந்து கடைகளில் சோதனை

பூச்சி மருந்து கடைகளில் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனை முடிவில் பூச்சிக்கொல்லி மருந்து சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விதிகள் 1971-ன் படி பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் இயங்குகிறதா எனவும், மாசு கட்டுப்பாடு வாரிய சான்றிதழ், மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக்குழு சான்றிதழ், பூச்சி மருந்து மூலக்கூறு கொள்முதல், பயன்பாடு மற்றும் உற்பத்தி பதிவேடுகள், தீயணைப்பு மீட்பு பணித்துறையின் தடையில்லா சான்று, ஆய்வக வேதியியலாளர் விவரம், நிலையத்திற்கு தேவையான இட வசதி, தொழிலாளர்கள் வருகை பதிவேடு தொழிலாளர்களுக்கு போதிய முதலுதவி சிகிச்சை மற்றும் சலுகைகள் அளிக்கப்படுகிறதா என அனைத்து சான்றுகள், பதிவேடுகள், ஆய்வகம் மற்றும் உற்பத்தி நிலையங்களை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை