மேலும் செய்திகள்
'இனிக்காத' பலகார சீட்டு: கடிவாளம் போடுவது யார்?
16-Oct-2024
சிவகங்கை : தீபாவளி பண்டிகைக்கு சுவைக்க நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பலகாரங்கள் தயாராகி வருகின்றன.மாவட்டத்திலேயே காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் செட்டிநாடு பலகாரம் தயாரிப்பது, சிறு தொழிலாக நடைபெற்று வருகிறது. இங்கு, வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப தேங்காய் எண்ணெய், ரீபைண்ட் ஆயில், நெய் போன்வற்றில் தேன் குழல் (முறுக்கு), அதிரசம், மனக்கோலம், உப்பு சீடை, இனிப்பு சீடை, மசாலா முறுக்கு, லட்டு, தட்டை, தேங்காய் எண்ணெய் முறுக்கு என விதவிதமான பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையாக இருப்பதால், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்ப, தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் சிறு தொழிலாக 'செட்டிநாடு' பலகாரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பாரம்பரிய வீடுகள், பலகாரம் தயாரிப்பு கூடங்களில் தலா 10 முதல் 30 பேர் வரை இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வளவு விதமான பலகாரங்கள் மார்க்கெட்டிற்கு வந்தாலும், செட்டிநாடு பலகாரங்களை அடித்து கொள்ள முடியாது. அந்தளவிற்கு சுவையுடன் காணப்படும். இதற்காகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிப்போருக்காக விமானங்களில் செட்டிநாடு பலகாரத்தை அனுப்பி வருகின்றனர்.நாட்டரசன்கோட்டை எம்.ரமாபிரபா கூறியதாவது: நாட்டரசன்கோட்டையில் தயாராகும் பலகாரத்திற்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம் உண்டு. இங்கு முறுக்கு, அதிரசம் ஒன்று தலா ரூ.8க்கும், தேங்காய் எண்ணெய் முறுக்கு ரூ.15க்கும் விற்கிறோம். மாவு உருண்டை, சீப்பு சீடை கிலோ ரூ.500க்கும், உப்பு சீடை, மனகோலம் கிலோ ரூ.450க்கும், இனிப்பு, கார சீடை, தட்டை, லட்டு போன்றவை கிலோ ரூ.400க்கும் கிடைக்கும். சுகாதாரமான முறையில் இங்கு பலகாரங்கள் தயாரிக்கிறோம், என்றார்.
16-Oct-2024