குழந்தை திருமணம் இளைஞர் மீது வழக்கு
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு குழந்தை திருமணம் நடத்தியதோடு, சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிர்லாவிற்கு புகார் வந்தது. விசாரணையில் சாக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினரான விக்னேஷ் 25 என்ற இளைஞர் திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. பிர்லா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்தார். போலீசார் விக்னேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.