உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகையில் நீர் திறப்பால் விவசாயிகள் * கூட்டுகுடிநீர் திட்டத்தில் நீர்மட்டம் உயரும்

வைகையில் நீர் திறப்பால் விவசாயிகள் * கூட்டுகுடிநீர் திட்டத்தில் நீர்மட்டம் உயரும்

மானாமதுரை : மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் கடந்த வாரம் வைகை அணையில் இருந்து ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை தாண்டி ராமநாதபுரத்திற்கு செல்கிறது. மதுரை அருகே உள்ள விரகனூர் மதகு அணையிலிருந்து மானாமதுரை அருகே உள்ள பார்த்திபனூர் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து மதுரை,அருப்புக்கோட்டை,திருப்புவனம், சிவகங்கை,மானாமதுரை,சாயல்குடி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும் 170 க்கு மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கடுமையாக தாக்கியதின் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இதனால் குடிநீர் தட்டப்பாடு தவிர்க்கப்படுவதோடு, விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் பாசன வசதி மூலம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளனர். /////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை