உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் கம்பத்தால் அச்சம்

மின் கம்பத்தால் அச்சம்

திருப்புவனம் அருகே பிரமனூர், அச்சங்குளம், வில்லியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு,தென்னை, உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது. விவசாய தேவைக்காக மோட்டார் பம்ப் செட்களும் பொருத்தப்பட்டுள்ளன.விவசாய தேவைக்காக வயல்வெளிகளில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சீரான, தடையின்றி தண்ணீர் பாய்ச்ச வசதியாக ஆங்காங்கே 100 கிலோ வாட் திறனுள்ள டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மர் முறையாக மின்கம்பத்தில் பொருத்தாமல், அருகில் சிறியதாக சிமெண்ட் மேடை அமைத்து அதில் டிரான்ஸ்பார்மரை பொருத்தியுள்ளனர். ஆனால் சிமெண்ட் மேடையை தரமாக அமைக்கவில்லை. பல இடங்களில் சிமெண்ட் மேடைகள் சரிந்து கிடக்கின்றன.டிரான்ஸ்பார்மர்களின் பாரம் தாங்காமல் சிமெண்ட் மேடை அப்படியே அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மின்கம்பத்தில் டிரான்ஸ்பார்மர் சாய்ந்துள்ளதால் மின்கம்பத்தில் பழுது பார்க்க கூட ஊழியர்கள் ஏற முடியவில்லை.மேலும் அருகில் விவசாய நிலங்கள் மற்றும் தார்ச்சாலையும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். பிரமனூரில் இருந்து அச்சங்குளம் செல்லும் பாதையில் மிகவும் ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர் சாய்ந்துள்ளது. விவசாயிகள் பலமுறை மின்வாரியத்திடம் புகார் செய்தும் சரி செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை