உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிப்.26ல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு

பிப்.26ல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிப்.26ம் தேதி நடக்கக்கூடிய பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வில் 17,978 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் 279 பள்ளிகளில் உள்ள 17,978 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 26ல் எழுத உள்ளனர். இவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு பிப்.26 முதல் 29 வரை பள்ளிகளில் நடைபெற உள்ளது. இந்த செய்முறை தேர்வில் 8 ஆயிரத்து 853 மாணவர்களும், 9 ஆயிரத்து 125 மாணவிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தேர்வு 25 மதிப்பெண்களுக்கு இரண்டு மணி நேரம் நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி சமந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை