உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு   கலெக்டர் பொற்கொடி தகவல்  

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு   கலெக்டர் பொற்கொடி தகவல்  

சிவகங்கை: மாவட்ட அளவில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் 215 இடங்களில் நடத்தப்பட்டு, அதில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும், என சிவகங்கை கலெக்டர் கே.பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி இம்முகாமை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அன்றைய தினமே எஸ்.புதுார் ஒன்றியம் வாராப்பூரில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைக்கிறார். முகாமை கண்காணிக்க தாலுகாவிற்கு ஒரு துணை கலெக்டர் அந்தஸ்தில் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளோம். திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் முகாம் நடைபெறும். இங்கு மருத்துவ முகாம், போலீஸ் உதவி மையமும் நடக்கும். மகளிர் உரிமை தொகை பெறாதவர்களிடம் முகாம்களில் மனுக்கள் பெறப்படும்.இ- சேவை மையமும் இருக்கும். அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் இருப்பார்கள். மாநகராட்சி, நகராட்சியில் 3 வார்டுக்கு ஒரு முகாமும், பேரூராட்சிகளில் 2 வார்டிற்கு ஒரு முகாம், கிராம ஊராட்சிகளில் கிராம மக்களுக்கு ஏற்ப முகாம் அமைத்து மக்களிடம் மனுக்கள் பெறப்படும். இம்முகாமில் மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம். சிறு சிறு பிரச்னைகளுக்கு உடனுக்குடனும், அதிகபட்சம் அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களுக்குள் தீர்வு பெற்று தரப்படும். இம்முகாம் ஜூலை 15ல் துவங்கி அக்.,17 வரை நடக்கும். இம்முகாம் மூலம் அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை. அலுவலகத்தில் செய்யும் பணிகளை தான், முகாம்களில் துரிதமாக செய்ய உள்ளனர். தொடர்ந்து ஜூலை 15 முதல் அக்., 17 வரை மூன்று கட்டமாக முகாம் நடத்தப்படும், என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.அரவிந்த், கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஸ் சத்தார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை