உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடந்தது. ஒளிப்பதிவாளர் செழியன் கலந்து கொண்டார். கல்லூரி தாளாளர் சேது குமணன் தொடங்கி வைத்தார். ஷாப்ட் ஸ்கில் பயிற்சியாளர் வினைதீர்த்தான், விசாலையன் கோட்டை விவசாயி அசோகன், சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை செயலர் கோகிலம், சென்னை அம்பத்துார் சோகா இகேதா மகளிர் கல்லூரி துணை முதல்வர் கண்மணி, செயலர் கந்தப்பழம் கலந்து கொண்டனர். சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி முதல்வர் விஷ்ணு பிரியா வரவேற்றார். விழாவில் மாணவர்கள்,பேராசிரியர்கள் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை