உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு 

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு 

சிவகங்கை: சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் குட்வின் சாலமன்ராஜ் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பி.விஜயகுமார், தொழிலாளர் நல உதவி கமிஷனர் சதீஷ்குமார், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நத்தர்ஷா பங்கேற்றனர். மாவட்ட வழங்கல் அலுவலக தாசில்தார் முபாரக் உசேன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை