உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் தொடர் மின்வெட்டு

திருப்புவனத்தில் தொடர் மின்வெட்டு

திருப்புவனம் : திருப்புவனத்தில் தினசரி 20க்கும் மேற்பட்ட முறை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையம் மூலம் திருப்புவனம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.நகரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், சார்நிலை கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து தகவல்களும் கணினி மூலமே பதிவு செய்யப்படுகின்றன. மின்சாரம் தடைபட்டால் சிறிது நேரம் செயல்பட ஒருசில அலுவலகங்களில் மட்டுமே பேட்டரி வசதி உண்டு, மற்ற அலுவலகங்களில் இல்லை.அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை