உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாடு

கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாடு

திருப்புவனம்: திருப்புவனத்தில் சாலை விபத்தில் உயிர் தப்பி ஓடிய கிடை மாடுகளில் ஒன்று மணலுார் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் மே 17ம் தேதி விருதுநகர் மாவட்டம் கிடாக்குழி கிராமத்தில் கிடை அமைப்பதற்காக அய்யனார் என்பவர் நான்கு பேருடன் 110 கிடை மாடுகளை அழைத்து சென்றார். திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் செல்லும் போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சரக்கு லாரி மோதியதில் 12 மாடுகள் உயிரிழந்தன. மீதியுள்ள மாடுகள் அதிர்ச்சியில் சிதறி ஓடின. இதில் 50 மாடுகளை கண்டு பிடித்தனர். மீதியுள்ள 48 மாடுகளில் இரண்டு மணலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் ஒன்றும், தோப்பில் ஒன்றும் இறந்து கிடந்தது. மீதியுள்ள 46 மாடுகளை உரிமையாளர்கள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !