உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மாடுகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி மொழி குழு தலைவர் தகவல்

குப்பை பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மாடுகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி மொழி குழு தலைவர் தகவல்

சிவகங்கை: குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகளை மாடுகள் சாப்பிடுகிறது. அதில் 'டை ஆக்ஸைடு' என்ற நச்சுப்பொருள் இருக்கிறது. அவற்றை சாப்பிடும் பசுக்கள் தரும் பால் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என சிவகங்கையில் சட்டசபை உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். அவர் கூறியதாவது: சட்டசபை உறுதிமொழிக் குழுக்களுக்கு இதுவரை 15,000 மனுக்கள் வரை வந்ததில் 10,000க்கும் மேல் தீர்வு பெற்று தந்துள்ளோம். சிவகங்கையில் இருந்து 189 மனுக்கள் வந்ததில் 91 மனுக்களுக்கு தீர்வு பெறப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்தில் சிட்கோ, சிப்காட், டிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க அரசை வலியுறுத்துவோம். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.2,159 கோடி செலவிட்டு இந்தாண்டு அக்டோபருக்குள் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் உறுதியளித்துள்ளது. சிவகங்கையில் குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகளை மாடுகள் சாப்பிடுகிறது. அதில் 'டை ஆக்ஸைடு' என்ற நச்சு பொருள் இருக்கிறது. அவற்றை சாப்பிடும் பசுக்கள் தரும் பால் மூலம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார். கலெக்டர் பொற்கொடி, எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி மற்றும் உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை