உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்

டிரான்ஸ்பார்மர் பழுதால் கருகும் பயிர்கள்

மானாமதுரை; மானாமதுரை அருகே செய்யாலுார் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் 15 நாட்களுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள செய்யாலுார் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி 15 நாட்களுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரமே சப்ளையாகிறது. இதனால் மின் சாதனங்களை இயக்க முடியவில்லை. பம்பு செட்கள் இயங்காததால் பயிர்கள், தென்னை மரங்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் முத்துமாரி கூறியதாவது: குறைந்தழுத்த மின்சாரம் சரிசெய்யப்பட்டு விட்டது.புதிய 22 கே.வி.,திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் இருப்பு இல்லை இன்னும் ஒரு சில நாட்களில் வந்தவுடன் உடனடியாக பொருத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி