ரயில்வே ஊழியருக்கு வெட்டு
மானாமதுரை:சிவகங்கைமாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கமணி, தங்கராசு. இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8:15 மணிக்கு மானாமதுரையிலிருந்து தங்கராசுவின் உறவினரான ரயில்வே ஊழியர் பாலமுருகன் , கீழப்பசலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது தங்கமணி தரப்பைச் சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பாலமுருகன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கூடியிருந்த அவரது உறவினர்கள் போலீசார் இவ்வழக்கில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காததால்தான் பாலமுருகனை தங்கமணி தரப்பினர் வெட்டியதாக கூறி குற்றம் சாட்டி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.