உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் சைக்கிள் போட்டி 

காளையார்கோவிலில் சைக்கிள் போட்டி 

சிவகங்கை: காளையார்கோவிலில் விளையாட்டு மைய கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்,பெரியவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.காளையார்கோவிலில், ஒலிம்பியாட் கொடி அறிமுக விழா மற்றும் சைக்கிள் போட்டி நடந்தது. கூட்டமைப்பு தலைவர் பகீர் முகைதீன் தலைமை வகித்தார். செயலாளர் சூசை ஆரோக்கியமலர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் மணியழகு, இன்ஸ்பெக்டர் சரவண போஸ் ஒலிம்பியாட் கொடியை ஏற்றினர்.ஆறு முதல் 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகள், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக சைக்கிள் போட்டி நடந்தது. இது தவிர பொது பிரிவில் ஆண், பெண்களுக்கான போட்டி நடந்தது. போட்டியை துணை தலைவர் நாகராஜன், மோசஸ், ராமர் பாண்டி, திருநாவுக்கரசு, ஆரோக்கிய பார்த்திபன் துவக்கி வைத்தனர்.பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை