மானாமதுரையில் சூறாவளியுடன் மழை: கன்னார் தெருவில் சாய்ந்த மரம்
மானாமதுரை: மானாமதுரையில் நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்ததால், கன்னார் தெருவில் இருந்த பழமையான மரம் ஒன்றும் என 10 க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மானாமதுரையில் நேற்று சூறாவளி காற்று வீசியதால், கன்னார் தெரு. தெ.புதுக்கோட்டை ரோட்டில் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மானாமதுரை - பரமக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் பழமையான அரசு, வேப்ப மரம் சாய்ந்தது. மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மரங்களை அகற்றினர். ////