சேதமான செங்கோட்டை ரோடு
மானாமதுரை : மானாமதுரை அருகே செங்கோட்டை செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மானாமதுரை அருகே செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வாகனங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களின் வசதிக்கென போதிய தார் ரோடு வசதிகள் இல்லை. இங்கு 15 ஆண்டுக்கு முன் போடப்பட்ட தார் ரோட்டை புதுப்பிக்காமல், கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், இந்த ரோடு குண்டும் குழியுமாக அரித்து போய்கிடக்கிறது. இந்தவழித்தடத்தில் செல்லும் ஆட்டோர், கார், வேன் போன்ற வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. இந்தரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.