மேலும் செய்திகள்
செயல்படாத ‛' சிக்னல்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
27-Aug-2024
திருப்புவனம்: மதுரை - -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சிக்னல் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு கடந்த 2016 முதல் போக்குவரத்து நடந்து வருகிறது.முக்கிய சாலைகள், பிரதான சாலைகள் குறுக்கிடும் இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற சாலைகளை விட மதுரை- - ராமேஸ்வரம் சாலையில் வெளிநாடு, வெளிமாநில வாகன ஓட்டுனர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை பலகைகளை விட சிக்னல் தான் அதிகம் புரியும், ஆனால் நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சிக்னல் சேதமடைந்துள்ளதுடன், பழுதாகியும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.தானியங்கி சிக்னல்களில் பேட்டரி பழுது, வாகனங்கள் மோதியதால் சேதமடைந்தது என பல்வேறு காரணங்களால் சிக்னல் வேலை செய்வது இல்லை.எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பழுதாகியுள்ள சிக்னல்களை சரி செய்ய வேண்டும், புதிய சிக்னல்களையும் நிறுவ வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
27-Aug-2024