உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்களை பதம் பார்க்கும் கருவேல மரங்களால் ஆபத்து

கண்களை பதம் பார்க்கும் கருவேல மரங்களால் ஆபத்து

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. பெரும்பாலான கிராமமக்கள் மதுரை, திருப்புவனம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் டூவீலர்களில் சென்று வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்பாச்சேத்தி வரை சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பல இடங்களில் சாலையை தாண்டி உட்புறம் வரை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பகல் நேரங்களில் பலரும் கருவேல மரங்கள் ரோட்டில் இருப்பதை பார்த்து விலகி சென்று விடுகின்றனர். இரவு நேரங்களில் ரோட்டின் குறுக்கே கருவேல மரங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி காயமடைகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையின் ஒரங்களில் உள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை