தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு ரூ.5.73 கோடியில் கட்ட முடிவு
சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தீயணைப்பு வீரர்களுக்கென ரூ.5.73 கோடி குடியிருப்பிற்கான பூமி பூஜை நடந்தது.தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் சார்பில் இங்கு பணிபுரியும் தீயணைப்பு அலுவலர், வீரர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர அரசு ரூ.5.73 கோடி ஒதுக்கியுள்ளது. இக்குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.அப்பாஸ் தலைமை வகித்தார். உதவி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி, போலீஸ் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஜேம்ஸ்தாஸ், உதவி செயற் பொறியாளர் சரோஜா, இளநிலை பொறியாளர் பாண்டியராஜன் பங்கேற்றனர். இங்கு 2 தீயணைப்பு நிலைய அலுவலர் குடியிருப்பு, 16 வீரர்களுக்கு தரைத்தளம், மூன்று மாடி கட்டடங்களுடன் கட்டித் தரப்பட உள்ளன.