உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சர்வர் பிரச்னையால் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் தாமதம்; ஊழியர்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

சர்வர் பிரச்னையால் பிறப்பு ,இறப்பு சான்றிதழ் தாமதம்; ஊழியர்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் சர்வர் பிரச்னையால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்தல், திருத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெயர் திருத்தத்திற்காக 10ம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்கின்றனர்.சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால் கடந்த 10 நாட்களுக்கும் மேல் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவிற்காக 100க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களில் 60 பிறப்பு சான்று, 30 திருத்த சான்று, ஒரு இறப்பு சான்று தொடர்பான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் பெயர் திருத்தச்சான்றிதழில் பெரும்பாலானோர் 10ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்கள் பொது தேர்விற்கு பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் பிறப்பு சான்றிதழிலும் ஒரே மாதிரி பெயர் இருப்பதற்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதில் எப்போதாவது சர்வர் கிடைக்கும் நேரத்தில் சுகாதார அலுவலர் கையெழுத்து இடுவதற்கு நகராட்சியில் சுகாதார அலுவலர் இல்லை. இதனால் பிறப்பு இறப்புக்காக வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் உள்ளது.சுகாதார அலுவலர் வேண்டும்நகராட்சியில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார் அவரும் பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதேபோல் சுகாதார அலுவலர் கடந்த மாதம் பணி மாறுதலில் சென்றார். தற்போது தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் சேர்த்து பார்க்கிறார். நிரந்தரமாக சுகாதார அலுவலர், ஆய்வாளரை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும். நகராட்சியில் துப்புரவு பணி, சுகாதாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு, பிறப்பு, இறப்பு பதிவில் தொய்வு ஏற்படுவதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலாளர் கென்னடி கூறுகையில், சிவகங்கை நகராட்சிக்கு நிரந்தர சுகாதார அலுவலர் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வர் பிரச்னை தீர்ந்து விட்டது. விரைவில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை