உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

புதருக்குள் புதைந்த சிவன் கோயில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊருணிக்குள் பழமையான சிவன் கோயில் புதைந்திருக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு நடத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்துார் கிராமத்தில் பேயம்பன் பெரிய ஊருணி என்ற பழமையான நீர்நிலை உள்ளது.இதன் அருகே சீமைக்கருவேல மரங்களுக்கு இடையே பழமையான சிவன் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகிறது. சிவலிங்கம் இல்லாத ஆவுடையும், சில அடி துாரத்தில் சீமைக்கருவேல மரங்களுக்கு இடையில் நந்தி சிலையும் கிடக்கிறது.மேலும் மண்ணுக்குள் கோயில் துாண்கள் மண் மூடி கிடக்கிறது. இந்த இடத்தில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் இருந்து, படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் மண்ணுக்குள், கோயில் இருந்ததற்கான மேலும் பல ஆதாரங்கள் இருக்கலாம். எனவே இப்பகுதியில் அகழாய்வு செய்து மண்ணில் புதைந்திருக்கும் கோயில், சிலைகள், துாண்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை