மேலும் செய்திகள்
சதுரகிரியில் அனுமதி மறுப்பு பக்தர்கள் ஏமாற்றம்
06-Apr-2025
காரைக்குடி: ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், கடலில் அரிப்பால் காணாமல் போகும் திருச்செந்துார்கோயிலை பாதுகாக்க வலியுறுத்தியும், ஜூன் 22 ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதும் வீடுவீடாகச் சென்று முருக பக்தர்கள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். காரைக்குடியில் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அனுமதி தரவில்லை என்று காரைக்குடி போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர். பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி அளிக்கும் போலீசார் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளிக்காததை கண்டிக்கிறோம் என தெரிவித்துஉள்ளார்.
06-Apr-2025