உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  துணை முதல்வர் உதயநிதி இன்று காரைக்குடி வருகை

 துணை முதல்வர் உதயநிதி இன்று காரைக்குடி வருகை

காரைக்குடி: பிளஸ் 1 மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி இன்று காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, ரூ.246 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11:00 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன், மகேஷ், கலெக்டர் பொற்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அரசின் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மாலை 6:00 மணிக்கு எல்.சி.டி. பழனியப்பா கலையரங்கத்தில் நடைபெறும், திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் ராம. சுப்பையா 118 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார். இரவு காரைக்குடியில் தங்கி நாளை காலை 9:30 மணிக்கு புறப்பட்டு திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி