பதிவுத் துறையில் ஆன் லைனில் நகல் ஆவணம் பெற முடியாமல் தவிப்பு
திருப்புத்துார்: பதிவுத்துறை இணையதளத்தில் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள குறைபாடால் நகல் ஆவணங்களை பெறுவதற்கான 'ஆன் லைன்' விண்ணப்பம் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.பொதுமக்கள் தங்கள் சொத்து சம்பந்தமாக முன்பு நடந்த பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களின் நகலை பெற பத்திரவுத்துறை இணையதளமான https://tnreginet.gov.inல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஆவண எண்,ஆண்டு,விண்ணப்பதாரர் விபரங்கள் உள்ளீடு செய்து விண்ணப்பம் இறுதியானவுடன் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும்.ஆனால் கட்டணம் செலுத்தும் பகுதிக்கு செல்லும் போது தொழில் நுட்ப குளறுபடியால் விண்ணப்பம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. பலமுறை முயற்சி செய்தாலும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக 'ஆன் லைன்' ல் நகல் ஆவணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதனால் பலரும் அலுவலகத்திற்கு நேரடியாக செல்கின்றனர்.