உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மெயின் ரோட்டில் நிற்கும் மணல் லாரிகளால் அபாயம் : விபத்துக்களுடன் நெரிசலும் தொடர்கிறது

மெயின் ரோட்டில் நிற்கும் மணல் லாரிகளால் அபாயம் : விபத்துக்களுடன் நெரிசலும் தொடர்கிறது

மானாமதுரை : மதுரை - ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் மானாமதுரை அருகே துத்திகுளம் வைகை ஆற்று பகுதியில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து ஏராளமான லாரிகள் மணல் அள்ளிச் செல்ல வருகின்றன. குவாரி காலை 7 மணிக்கு துவங்குவதால், முதல் நாள் இரவிலிருந்தே லாரிகள் குவாரிக்கு அருகில் மெயின் ரோட்டில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளி,கல்லுரிகளுக்கு செல்லும் மாணவர்களும்,வேலைக்குச் செல்லும் ஊழியர்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மணல் லாரிகளும் வேகமாக செல்வதினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இப்பகுதியில் டிராபிக் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை