உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பேரூராட்சி, ஒன்றியத்தில் பாதுகாப்பு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பேரூராட்சி, ஒன்றியத்தில் பாதுகாப்பு

திருப்புத்தூர் : உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியதை அடுத்து பேரூராட்சி,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் துவங்கியுள்ளது. பேரூராட்சி,ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கட்சியினர், சுயேச்சைகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான படிவங்களை பெற்றுச் செல்கின்றனர். இவ்வலுவலகங்களில் வழக்கத்தை விட அதிகமானோர் வந்து செல்லத் துவங்கி விட்டனர். சர்வ கட்சியினரும் வந்து செல்வதால் பாதுகாப்பு கருதி இந்த அலுவலகங்களில் நேற்று முன் தினம் முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 பேர் மனு தாக்கல்: காளையார்கோவில் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 19 ஒன்றிய கவுன்சிலர், 43 ஊராட்சி தலைவர் , 312 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேளாரேந்தல் ஊராட்சி தலைவர் பதவிக்கு சாத்திச்சேரி புஷ்பலதா , மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் இதுவரை ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு196 பேரும், நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு ஒருவர் உட்பட 228 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை