உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளி அலுவலர் சங்க கூட்டம்

மாற்றுத்திறனாளி அலுவலர் சங்க கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் ஆசிரியர் நல சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோக் பாரதி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பன் வரவேற்றார். மாவட்ட இணைத்தலைவர் மாலதி, மாவட்ட இணைச் செயலாளர் காளிதாஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் குமார், முத்துப்பாண்டி,மாவட்ட மகளிர் அணி தலைவி இந்துமதி, மாவட்ட இணை செயலாளர் நாகலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாற்றுத்திறனாளி அலுவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி