மானாமதுரையில் அதிகரிக்கும் நோய்
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் மற்றும் மழை காரணமாக குளிர்கால நோய் அதிகரித்து குழந்தைகள் முதியவர்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அதிகாலையில் குளிர் வாட்டி வருகிறது. மேலும் இரவு முதலே குளிர்ந்து காற்றுடன் பனி காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருப்பதை காண முடிகிறது.