உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வருவாய் தரும் வழித்தடத்தில் அரசு பஸ் நிறுத்தம் பணியாளர்கள் அதிருப்தி

வருவாய் தரும் வழித்தடத்தில் அரசு பஸ் நிறுத்தம் பணியாளர்கள் அதிருப்தி

திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்லும் வழித்தடத்தில் இயங்கிய அரசு பஸ் நல்ல வருவாய் இருந்த நிலையில் நிறுத்தியுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழக இந்த நடவடிக்கை அரசு பஸ் பணியாளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்புத்துார் அரசு போக்குவரத்து கழக டெப்போவிலிருந்து திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி- தேவகோட்டை- திருவாடானை- ஆர்.எஸ்.மங்கலம்- வழியாக ராமநாதபுரத்திற்கு பஸ் இயங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் சென்று திரும்பி மீண்டும் மதியம் 1:30 மணிக்கு திருப்புத்துாரிலிருந்து புறப்படும்.இந்த வழித்தடத்தில் சென்ற இந்த பஸ் தினசரி ரூ.25 ஆயிரத்திற்கு மேல் வருவாய் ஈட்டியது. அரசு பஸ்களில் கி.மீ..க்கு வருவாய் விகிதத்தில் ரூ.40க்கும் அதிகமாக பெற்றுத் தந்துள்ளது.இந்நிலையில் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ் கடந்த 5 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியினர் நேரடி பஸ் வசதியை இழந்ததுடன், போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. பணியாளர்களும் அதிருப்திக்குள்ளாயினர்.இந்த வழித்தடத்தில் சென்ற பஸ் நிறுத்தப்பட்டதால் தனியார் பஸ்களுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பானது. அந்த வழித்தடத்தில் சென்ற பஸ் தற்போது திருப்புத்துார் -- சிவகங்கை வழித் தடத்தில் இயங்குகிறது.இதனால் தினசரி வருவாய் ரூ.15 ஆயிரம் என்ற அளவில் குறைந்து விட்டது.அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கவலைப்படும் அதிகாரிகள், லாபத்தில் இயங்கிய வழித்தடத்தை நிறுத்தியது ஏன் என்று தெரியவில்லை. வருவாய் இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவும், இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டியும் பணியாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி