விவசாயிகளுக்கு உரம் வழங்க பி.ஓ.எஸ்., கருவி வினியோகம்
சிவகங்கை: உரக்கடைகளில் விரைவாக உரங்களை விற்பனை செய்ய ஏதுவாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பி.ஓ.எஸ்., கருவி வழங்கப்பட்டது. சிவகங்கையில் நடந்த விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தனர். உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து வரவேற்றார். வேளாண்மை அலுவலர் பொன்னுச்சாமி, இந்தியன் பொட்டாஷ் நிறுவன மண்டல மேலாளர் ஹரிபாபு, டான்பெட் மண்டல மேலாளர் சரவணன், தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள், தனியார் உரக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட அளவில் உள்ள 110 தனியார் உரக்கடை மற்றும் 116 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை கொண்டு விரைந்து உரங்களை விற்பனை செய்ய ஏதுவாக பி.ஓ.எஸ்.,கருவி வழங்கப்பட்டது.