உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்

வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வாக்காளர்கள் வீடுகளில் ஓட்டுச்சாவடி அலுவலர் கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகிப்பதை கலெக்டர் பொற்கொடி ஆய்வு செய்தார். திருப்புத்துார் தொகுதியில் மொத்தம் 335 ஒட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் திருப்புத்துார் தாலுகாவில் 207 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. நேற்று காலை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் படிவங்களை வாக்காளர்களுக்கு கொடுக்கத் துவங்கினர். ஒரு வாக்காளருக்கு தலா 2 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. ஒரு படிவத்தை வாக்காளர் பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். மற்றொரு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர் கையெழுத்திட்டு வாக்காளரிடம் வழங்க வேண்டும். இதற்காக 3 முறை வாக்காளரை ஓட்டுச்சாவடி அலுவலர் சந்திக்க வேண்டும். நேற்று மாலை வரை ஒரு ஓட்டுச்சாவடிக்கு 20 முதல் 50 வீடுகளில் வாக்காளர்களை அலுவலர்கள் சந்தித்தனர். அடுத்த நாட்களில் மேலும் வேகப்படுத்தப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். திருப்புத்துார் அருகே ஊர்குளத்தான்பட்டியில் படிவங்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொற்கொடி,தாசில்தார் மாணிக்கவாசகம் ஆய்வு செய்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் படிவம் வினியோகிப்பதில் சிரமங்கள் உள்ளதா என்று கலெக்டர் விசாரித்தார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்புத்துாரில் தனியார் மகாலில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை