உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தபால் நிலையங்களில் பிப்.16 வரை தங்கபத்திரம் விற்பனை   கோட்ட கண்காணிப்பாளர் தகவல் 

தபால் நிலையங்களில் பிப்.16 வரை தங்கபத்திரம் விற்பனை   கோட்ட கண்காணிப்பாளர் தகவல் 

சிவகங்கை: தபால் நிலையங்களில் இன்று முதல் பிப்., 16 வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறும் என சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,மத்திய அரசு தங்க பத்திரத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. தபால் மூலம் இன்று முதல் பிப்., 16 வரை வாங்கி கொள்ளலாம். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263. சிவகங்கை கோட்டத்தில் உள்ள தலைமை, துணை தபால் நிலையங்களில் பெறலாம். தங்க பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதி ஆண்டில் குறைந்தது ஒரு கிராம் முதல் அதிக பட்சம் 4 கிலோ வரை வாங்கி கொள்ளலாம்.மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து தங்கத்தின் விலைக்கு முதிர்வடையும் நாளில் தங்கத்துக்கு நிகரான பணமும் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பான்கார்டு அவசியம். ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒரு நகல் தேவை. தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் வழங்கி, தங்க பத்திரம் பெறலாம். மேலும் விபரத்திற்கு 99436 00959ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை