உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷனில் பயன்படாத கழிப்பறை

ரயில்வே ஸ்டேஷனில் பயன்படாத கழிப்பறை

காரைக்குடி: கல்லல் ரயில்வே ஸ்டேஷனில் பஸ் வசதியின்றி பயணிகள் சிரமப்படுவதோடு, கழிப்பறையும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.கல்லல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் சென்னை, ராமேஸ்வரம், விருதுநகர் உட்பட 5 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் தினமும் கல்லல், திருப்புத்துார், மதகுபட்டி சொக்கநாதபுரம் சிறுவயல் உட்பட சுற்று பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.இந்த ரயில்வே ஸ்டேஷனிற்கு பயணிகள் வந்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இரவில் கல்லல் ரயில்வே ஸ்டேஷனுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் இறங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் அருகே கழிப்பிடம் பூட்டி கிடப்பதால் பயணிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையும் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி