உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் தொட்டி கோளாறு: மக்கள் அவதி

குடிநீர் தொட்டி கோளாறு: மக்கள் அவதி

சிவகங்கை : சிவகங்கை 22 வது வார்டில் குடிநீர் தொட்டி ஒரு மாதத்திற்கு மேலாக கோளராக இருப்பதால் தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை நகர் 22 வது வார்டில் உள்ளது வேலுநாச்சியார் தெரு. இந்த தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.தெருவில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகின்ற நிலையில் குடிநீர் தொட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் வருவதில்லை.போர் ஒரு மாதமாக பழுதாக உள்ளது. இந்த தண்ணீரை தான் இந்த பகுதி மக்கள் புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.குடிநீர் தொட்டியில் தண்ணீர் வராததால் குடம் பத்து ரூபாய்க்கு தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ