உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பஸ்சில் ரூ.4.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்

 பஸ்சில் ரூ.4.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தனியார் பஸ்சில் ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ எடையுள்ள மெத் ஆம் ெபட்டமைன் போதைப் பொருளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். தொண்டி அருகே பஸ்சில் போதை பொருள் கடத்துவதாக தொண்டி சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ், கண்காணிப்பாளர் பாபுராஜ், போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அறந்தாங்கியிலிருந்து தொண்டியை நோக்கி சென்ற தனியார் பஸ்சை பாசிபட்டினம் அருகே மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சின் பின்புறம் உள்ள இருக்கைக்கு அடியில் பாலிதீன் பைகள் இருந்தன. போலீசார் சோதனை செய்தபோது மெத் ஆம் ெபட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இது குறித்து சுங்கத்துறையினர் கூறுகையில், ஒன்றரை கிலோ எடையுள்ள மெத் ஆம் ெபட்டமைன் போதை பொருள் கைபற்றபட்டுள்ளது. பயணிகளிடம் விசாரணை செய்ததில் தகவல் கிடைக்கவில்லை. இந்த போதை பொருள் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, தொண்டியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்திருக்கலாம். இதன் மதிப்பு ரூ. 4 கோடியே 50 லட்சம் ஆகும். கடத்தல்காரர்களை தேடிவருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை