உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  முதியவருக்கு வெட்டு: கைது 2

 முதியவருக்கு வெட்டு: கைது 2

காரைக்குடி: காரைக்குடி நகரச் சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் 58. முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இவரது மகன் மணிகண்டன் பைக்கில் சென்ற போது, பைக் மோதிக்கொண்ட பிரச்னையில், மணிகண்டனுக்கும், தெற்கு தெரு செந்தில்நாதன் மகன் முத்துப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர் சந்தோஷ், இருவரும் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மணிகண்டன் இல்லை என தந்தை சீனிவாசன் கூறியதால், ஆத்திரம் அடைந்த இருவரும், சீனிவாசனை வாளால் வெட்டினர். காயம் அடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சீனிவாசன் மனைவி தனலட்சுமி புகாரின் பேரில் முத்துப்பாண்டி மற்றும் சந்தோஷ் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !